ஜல்கான்:-ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் பொது பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவல்லாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார்.அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார்.
பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண் சுதாரிப்பதற்குள் கிழே விழுந்து விட்டார். கிழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அவரது உறவினர்கள் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி