பிரசவத்துக்கு குறித்த தேதிக்கு 6 வாரங்கள் முன்னதாகவே ஆபரேஷன் மூலம் பிறந்த அந்த பெண் குழந்தையின் தலைப்பகுதியில் இடது பக்கத்தில் உள்ள முகத்துக்கு ‘ஹோப்’ (நம்பிக்கை), வலது பக்கத்தில் இருந்த முகத்துக்கு ‘ஃபெய்த்’ (பக்தி கலந்த நம்பிக்கை) என்று பெயரிட்ட பெற்றோர், ஆஸ்பத்திரியில் வைத்து கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தனர்.ஹோப் தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஃபெய்த் விழித்துக் கொண்டு அழும். அந்த சத்தத்தை கேட்டவுடன், ஹோப் விழித்துக் கொள்ளும். பின்னர் இரண்டையும் தூங்க வைத்து விட்டு, தாய் ஓய்வெடுக்கும்போது ஃபெய்த் திடீரென்று விழித்துக் கொண்டு அழும். ஹோப் அழத் தொடங்கும்.
ஒரே உடலுடன் பிறந்திருந்தாலும் முகங்கள் இரண்டாக இருப்பதால் ‘டிஸ்ரோசோபஸ்’ என்ற அபூர்வ இரட்டைப் பிறவிகளாகவே மருத்துவ உலகம் இத்தகையை குழந்தைகளை பார்க்கிறது.சரியாக 19 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்த ஃபெய்த்தும், ஹோப்பும் இன்று காலை உயிரிழந்தது பெற்றோரை மட்டுமின்றி ஆஸ்பத்திரி ஊழியர்களையும் பெரும் சோகத்திற்குள்ளாக்கியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி