செய்திகள் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்ததில் 21 பேர் பலி!…

ஆஸ்பத்திரியில் தீப்பிடித்ததில் 21 பேர் பலி!…

ஆஸ்பத்திரியில் தீப்பிடித்ததில் 21 பேர் பலி!… post thumbnail image
சியோல்:-தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே ஹயோசரங் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.தீ மளமள வென பரவியது. அதை தொடர்ந்து முதல் மாடியில் படுக்கையில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே 2வது மாடிக்கு பயங்கரமாக தீ பரவியது. இதனால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. எனவே, உள்ளே புகுந்து நோயாளிகளை காப்பாற்ற முடியவில்லை. தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 பேர் நோயாளிகள். ஒருவர் பணியில் இருந்த நர்சு ஆவார்.தீ விபத்தில் பலியான அனைவரும் 70 மற்றும் 80 வயதுக்குட்பட்ட முதியவர்கள். கடுமையான புகை மூட்டம் மற்றும் வயது முதிர்வு காரணமாக இவர்களால் தப்பி ஓட முடியவில்லை.

தென் கொரியாவில் சமீப காலமாக போரிடர்களால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கடலில் படகு மூழ்கியதில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 300 பேர் பலியாகினர். 2 நாட்களுக்கு முன்னதாக பஸ்சில் தீப்பிடித்ததில் 7 பேர் கருகி செத்தனர். 41 பேர் காயம் அடைந்தனர்.தற்போது ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து 21 பேர் பலியாகி உள்ளனர். படகு விபத்துக்கு தென் கொரிய அதிபர் பார்க் நியுன் மன்னிப்பு கேட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் சங் ஹாங் வன் பதவியை ராஜினாமா செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி