May 26, 2014

செய்திகள்

ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய பயணம்!…

பக்ரம்:-அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ரகசிய விஜயமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ரம் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய ஒபாமா அங்குள்ள தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்திற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர் படையினரிடம் இருந்து விவாதித்ததாக தெரிகிறது. 13 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக அங்கிருந்து குறைக்கக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு மீதமுள்ள ராணுவ வீரர்களில் எவ்வளவு பேர் அங்கேயே தங்க உள்ளனர் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பபடும் என ஒபாமா கூறியுள்ளார். ஒபாமா ஆப்கனுக்கு வந்தாலும் தலைநகர் காபூலுக்கு சென்று அந்நாட்டு அதிபரான ஹமிது கர்சாயையோ, அந்நாட்டு அரச உயரதிகளையோ அவர் சந்திக்கவில்லை. இதன் மூலம் அந்நாட்டில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவருடன் நட்பு பாராட்ட ஒபாமா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

செய்திகள்

இணையத்தில் பரவிய தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ!…

தாய்லாந்து:-தாய்லாந்து இளவரசர் மகா, ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீராஸ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாளை தங்கள் அரண்மனையில் கொண்டாடினர். இந்த விழாவுக்கு பல முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில் தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி தனது கணவருடன் கலந்துகொண்டார். ஆனால் அவருடைய உடம்பில் உடையே இல்லாமல் நிர்வாணமாக அவர் இருந்ததாக வீடியோ ஆதாரங்கள் கூறுகின்றன. ஒரு சிறிய அளவிலான உள்ளாடை மட்டும் அணிந்து இருந்தார். நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்டு தானும் கேக் சாப்பிட்டார். இவை எல்லாமே அவர் நிர்வாணமாகவே இருந்து செய்தது. விழாவுக்கு வந்திருந்த விருந்தாளிகள் அவருடைய நிர்வாணத்தை கண்டுகொள்ள வில்லை. இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்படி வெளிவந்தது என தெரியவில்லை என மன்னர் குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளதால் மன்னர் குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது.

செய்திகள், பொருளாதாரம்

சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…

ரியாத்:-சவூதியில் உள்ள ரியாத், அல்கோபார் உள்பட 110 இடங்களில் தற்போது மாம்பழ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்திய மாம்பழங்களான அல்போன்சோ, கேசர், தோட்டாபுரி, பதாமி, ராஜாபுரி போன்ற வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள மைசூர் முன்னாள் மன்னருக்கு சொந்தமான தோட்டங்களில் விளைந்த உயர்ரக மாம்பழங்களும் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.சவூதியின் தெற்கு பிராந்தியத்திற்குட்பட்ட ஜசான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக சவூதி அரசின் வேளாண்மை மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாம்பழ திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறும்.

செய்திகள், திரையுலகம்

தன் படத்தில் நடிக்க 22 நடிகர்களை அழைத்த பார்த்திபன்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கதையே இல்லாமல் புதுமையாக எடுத்து வருகிறார். ஆர்யா, அமலாபால், சேரன், பிரகாஷ்ராஜ், டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதுதவிர தன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க 22 நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதற்காக அவர் தயாரித்துள்ள புதுமையான அழைப்பிதழில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பவர்களின் படங்களை வெளியிட்டு அதற்கு அடுத்த பக்கத்தில் இவர்களும் இணையலாம் என்ற தலைப்பில் 22 நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளார். சித்தார்த், விக்ரம் பிரபு, விமல், பரத், நகுல், சிவகார்த்திகேயன், ஜெய், பிரசன்னா, கவுதம் உள்பட 22 பேர் படங்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களை கவுரவ தோற்றத்தில் நடிக்க பார்த்திபன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நாசருக்கு போனில் ஆறுதல் சொன்னார் ரஜினி!…

சென்னை:-நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் நாசரின் அக்காள் மகன் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். பைசல் உள்பட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பைசலுக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் தலைமையான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.நாசரும் அவரது மனைவி கமீலா நாசரும் மருத்துவமனையிலேயே இருந்து மகனை கவனித்து வருகிறார்கள். கமீலா நாசர் தொடர்ந்து கண்ணீரும், கம்பலையுமாகவே இருப்பதால் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் நாசரையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். டாக்டர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார். சென்னை வரும்போது பைசிலை சந்தித்து பேசுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

கணவரை விவாகரத்து செய்கிறார் நடிகை கரீஷ்மா கபூர்!…

மும்பை:-பிரபல பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர். 1991ல் அறிமுகமாகி பாம்பே டாக்கீஸ், ஓம் சாந்தி ஓம், ஜான்வார், ஷக்தி, ராஜா ஹிந்துஸ்தானி உள்ளட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கரீஷ்மா கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவர்களுக்கு சமீரா கபூர், ஜிகான் ராஜ்கபூர் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கரீஷ்மா தனது குழந்தைகளுடன் மும்பை திரும்பி வந்து தாயுடன் வசித்து வந்தார். தற்போது கணவன், மனைவி இருவரும் மும்பை பாந்திரா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு பரஸ்பரம் மனுதாக்கல் செய்துள்ளனர். குழந்தைகளையும் ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொள்ளவும் சம்மதம் தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளனர். விவாரத்து குறித்து இருவருமே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.பல வருடங்களுக்கு பின்பே பிரிந்து விட்டார்கள். இது ஒரு சட்டரீதியான நடவடிக்கை மட்டுமே.என்று அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

செய்திகள், திரையுலகம்

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.இதில் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார். அந்தப் பாடலை விஜய் பாடுகிறார். விஜய் பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி வருகிறது. இதனால் ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இதை உறுதி செய்துள்ளார். தன் ட்விட்டர் தளத்தில், ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22 அன்று வெளிவர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல், செய்திகள், திரையுலகம்

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…

கோவை:-கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்காக ஆலத்தி வச்சினம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. முகாமை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச காலணி வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலவச காலணிகளை வழங்கினார்.பின்னர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மோடியின் பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பது கண்டனத்துக்குரியது. இது தமிழர்களின் உணர்வை இழிவுபடுத்தும் செயல். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாக குரல் கொடுத்தவர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாதான். அவர் இலங்கை தமிழர் நலன் காக்க தொடர்ந்து பாடுபட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.மேற்கண்டவாறு அவர் கூறினார்.

செய்திகள், திரையுலகம்

கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்!…

மும்பை:-பாலிவுட்டில் 23ம் தேதியன்று ‘கோச்சடையான்‘, ‘எக்ஸ்மென்’, ‘ஹீரோபான்டி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஓபனிங்கை ஏற்படுத்தியது எக்ஸ்மென் படம்தானாம். கோச்சடையான் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓபனிங் இல்லையாம். காரணம் படம் சொன்ன தேதியில் வெளிவராமல் இருவாரங்கள் கழித்து வெளிவந்ததே என்கிறார்கள்.அதே சமயம் ‘ஹீரோபான்டி’ படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள். முதல் நாளிலேயே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். எக்ஸ்மென் படத்திற்கு 70 சதவீதத்திற்கு மேலும், ஹீரோபான்டி படத்திற்கு 60 சதவீதத்திற்கு மேலும், கோச்சடையான் படத்திற்கு 30 சதவீதத்திற்கு மேலும்தான் திரையரங்குகளில் கூட்டம் கூடியதாம்.ஹிந்தியில் மிகப் பெரிய செலவு செய்து கோச்சடையான் படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி ரசிகர்கள் கோச்சடையான் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷனை அவ்வளவா ரசிக்கவில்லையாம். ஆனாலும், படத்தின் கதையம்சம் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் போகப் போக கூட்டம் கூடும் என்கிறார்கள்.

அரசியல், செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

நடிகர் அம்பரீஷ் மீது நடிகை ரம்யா புகார்!…

பெங்களூர்:-தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ’வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம்புலி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்டராஜுவிடம் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை செய்து தோற்கடித்து விட்டனர் என்று ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். தற்போது தனது தோல்விக்கு நடிகர் அம்பரீஷ்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.அம்பரீஷ் மீது அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும் புகார் மனு அளித்துள்ளார். எனது தாத்தாவான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும், அம்பரீஷ்க்கும் நீண்ட நாட்களாக பகை இருந்தது. இதன் காரணமாக நான் தேர்தலில் நிற்பது அவருக்கு பிடிக்கவில்லை. தாத்தாவுடனான மோதலில் என்னை தோற்கடித்து விட்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். கன்னட நகரான அம்பரீஷ் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.

Scroll to Top