செய்திகள்,பொருளாதாரம் சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…

சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!…

சவூதி திருவிழாவில் இந்திய மாம்பழங்களுக்கு வரவேற்பு!… post thumbnail image
ரியாத்:-சவூதியில் உள்ள ரியாத், அல்கோபார் உள்பட 110 இடங்களில் தற்போது மாம்பழ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்திய மாம்பழங்களான அல்போன்சோ, கேசர், தோட்டாபுரி, பதாமி, ராஜாபுரி போன்ற வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவை மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள மைசூர் முன்னாள் மன்னருக்கு சொந்தமான தோட்டங்களில் விளைந்த உயர்ரக மாம்பழங்களும் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.சவூதியின் தெற்கு பிராந்தியத்திற்குட்பட்ட ஜசான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக சவூதி அரசின் வேளாண்மை மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாம்பழ திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி