அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இன்று முதல்மந்திரி பதவியில் இருந்து மோடி விலகல்!…

இன்று முதல்மந்திரி பதவியில் இருந்து மோடி விலகல்!…

இன்று முதல்மந்திரி பதவியில் இருந்து மோடி விலகல்!… post thumbnail image
ஆமதாபாத்:-பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடியை புதிய பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். மோடி 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.இதையடுத்து குஜராத் முதல்மந்திரி பதவியை மோடி இன்று ராஜினாமா செய்கிறார்.

இதற்காக இன்று குஜராத்துக்கு செல்லும் மோடி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிவு உபசார விழா நடத்துகிறார்கள். பின்னர், மாலை 3.30 மணி அளவில் பா.ஜனதா பிரதிநிதிகள் குழுவுடன் சேர்ந்து கவர்னர் கமலா பேனிவாலை மோடி சந்திக்கிறார்.

முதல்மந்திரி பதவி ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் சமர்ப்பிக்கிறார்.
பிறகு சபாநாயகர் வஜுபாய் வாலாவை மோடி சந்திக்கிறார். தனது எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் அவர் சமர்ப்பிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி