செய்திகள்,முதன்மை செய்திகள் ‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…

‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…

‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!… post thumbnail image
லண்டன்:-நைஜீரியாவில் சென்ற மாதம் 220 மாணவிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனில் சீனத்தொழிலாளர்கள் 10 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.இதையடுத்து, ஆப்பிரிக்காவில் மினி அல் கொய்தா வாக செயல்பட்டு வரும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க ஆப்பிரிக்காவின் நைஜீரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள 4 நாடுகளின் தலைவர்கள் ‘போர்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நைஜீரிய பாதுகாப்பு சம்பந்தமாக பாரீஸ் நகரத்திலுள்ள பில்ஸி மாளிகையில் நேற்று அவசர மாநாடு நடந்தது.அதில் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 4 அண்டை நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே உள்ளிட்ட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில் தீவிரவாதிகளை எதிர்த்து போராட ஆப்பிரிக்காவுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த மாநாட்டில் பேசிய தலைவர்கள் கூறுகையில்,கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க நைஜீரிய அரசு எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. போக்கோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் மட்டும் இல்லை. மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் ஒரு அல் கொய்தா அமைப்பாகவே அவர்கள் உருவெடுத்துள்ளார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் உதவிகள் இல்லாமல் அவர்களை கூண்டோடு அழிக்க முடியாது.

போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இருக்கும் பகுதியில் புலனாய்வு வல்லுனர்கள் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள், கண்காணிப்பு விமானங்கள் நிறுவப்பட்டுள்ளன. பள்ளி மாணவிகள் இருக்கும் இடத்தை தேடும் பணியில் அவர்கள் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் தவறான தகவல்களே கிடைப்பதால் தேடுதலில் தொய்வு ஏற்படுகிறது. என்று தெரிவித்தனர்.மாநாட்டுக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேமரூன் அதிபர்,போக்கோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்வதற்காக நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் மீது முழுமையான போரை தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி