இப்படம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராம்கி, அருண்விஜய், அருள்நிதி, ஸ்ரீகாந்த், நடிகைகள் நிரோஷா, ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, ஏ.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதுவரையிலான படங்களில் சுப்ரீம் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட சரத்குமார், இந்த படத்தின் மூலம் புரட்சி திலகம் என்ற அடைமொழியுடன் வருகிறார்.
இப்படம் குறித்து சரத்குமார் கூறும்போது, இந்த படம் எனது முதல் படம் மாதிரி ரொம்பவும் ஆவலோடு நடித்து வருகிறேன். ரொம்ப நாள் கழித்து நேர்,எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறும்போது, படத்தில் நேர்,எதிர்மறையாக வரும் இரண்டு கதாபாத்திரங்களிலும் சரத்குமார் நடித்தால்தான் நன்றாக இருக்கும். அதற்காகவே அவரை நடிக்க வைத்தோம். இப்படம் ஒரு க்ரைம், திரில்லர் படமாக இருக்கும். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்கிற படமாகவும் இருக்கும்.என்னுடைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதுபோல், இந்த படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதற்காக முன்னணி காமெடி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி