சோமா:-துருக்கியின் மேற்கு பகுதி மாகாணமான மனிசாவுக்கு உட்பட்ட சோமா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 13ம் தேதி 787 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிவிபத்து மற்றும் தீயில் சிக்கி 201 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பலத்த காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலர் உயிரிழந்து விட்டதால் பலி எண்ணிக்கை 282 ஆக உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து துருக்கி நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி டானர் யில்டிஸ் கூறுகையில், நிலக்கரி சுரங்கத்தில் 787 தொழிலாளர்கள் இருந்தனர். இதில் இதுவரை 282 பேர் இறந்து உள்ளனர். 363 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி