அதற்கு முன்னதாக நரேந்திரமோடி குஜராத் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவார். இதனால் குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது.இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காந்திநகரில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய முதல் மந்திரியை ஏகமனதாக தேர்ந்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முதல்வர் பதவியை பெற குஜராத் வருவாய் துறை மந்திரி அனந்திபென் படேல், நிதி மந்திரி நிதீன்படேல் மற்றும் மந்திரி சவுரப்படேல் ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் முதல்வர் பதவியை பெற அனந்திபென் படேலுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவாக உள்ளனர்.குஜராத்தில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக அனந்திபென் படேல் மந்திரியாக இருந்து வருகிறார். சாலை மேம்பாடு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என்று பல துறைகளில் பணியாற்றி நன்கு அனுபவம் பெற்றவர்.மேலும் இவருக்கு நரேந்திர மோடியின் ஆதரவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனந்திபென் படேல் புதிய முதல்வராவது உறுதியாகி விட்டது.
வரும் 20ம் தேதிக்குள் அவர் முதல் மந்திரி பதவியை ஏற்பார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி