செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!…

ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!…

ஐ.பி.எல்: ஐதராபாத்தை வென்றது மும்பை!… post thumbnail image
ஐதராபாத்:-ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்,மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய துவக்க வீரர் ஆரோன் பின்ச் 68 ரன்கள் விளாசினார். டேவிட் வார்னர் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிகர் தவான் 11 ரன்களும், ராகுல் 10 ரன்களும் சேர்த்தனர். மும்பை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. துவக்க வீரர் கவுதம் ஒரு ரன்னில் வெளியேறியபோதும், மற்றொரு துவக்க வீரர் சிம்மன்ஸ் மற்றும் ராயுடு இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சிம்மன்ஸ் 50 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஸ்கோர் 141 ஆக இருந்தபோது ராயுடு விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்கள் விளாசினார்.

பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும் (14 நாட் அவுட்), போலார்டும் (6 நாட் அவுட்) இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இதனால் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்த மும்பை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Finch A. c Pollard K. b Malinga L. 68 62 83 7 2 109.68
Dhawan S. b Malinga L. 11 11 21 2 0 100.00
Rahul L. run out Sharma R. 10 13 21 1 0 76.92
Warner D. not out 55 31 48 6 2 177.42
Ojha N. not out 7 3 7 0 1 233.33
Extras: (w 5, lb 1) 6
Total: (20 overs) 157 (7.9 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 1.6 0 17 0 10.63
Bumrah J. 3.6 0 24 0 6.67
Singh H. 3.6 0 27 0 7.50
Malinga L. 3.6 0 35 2 9.72
Ojha P. 3.6 0 32 1 8.89
Pollard K. 1.6 0 21 0 13.13

MUM – Inning

Batsman R B M 4s 6s S/R
Pollard K. not out 6 7 10 0 0 85.71
Simmons L. b Kumar B. 68 50 70 5 4 136.00
Gautam C. c Dhawan S. b Kumar B. 1 3 4 0 0 33.33
Rayudu A. c & b Henriques M. 68 46 73 7 2 147.83
Sharma R. not out 14 6 17 3 0 233.33
Extras: (w 3) 3
Total: (18.4 overs) 160 (8.6 runs per over)
Bowler O M R W E/R
Steyn D. 3.6 0 29 0 8.06
Kumar B. 3.6 0 21 2 5.83
Pathan I. 1.6 0 29 0 18.13
Mishra A. 2.6 0 33 0 12.69
Sharma K. 2.4 0 25 0 10.42
Henriques M. 2.6 0 23 1 8.85

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி