செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!… post thumbnail image
லண்டன்:-இஃபேன் என்றழைக்கப்படும் சிறிய ரக விமானத்தை ஏர்பஸ் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் முதன்முறையாக இன்று பிரான்சின் பார்டெக்ஸ் விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இஃபேன் எந்தவித பிரச்சனையும் இன்றி வானில் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது.

19 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தில் இருந்து வெளிவரும் சத்தமானது தலை முடியை உலர வைக்கும் ஹேர் டிரையர் கருவியின் அளவுக்கே இருக்கும்.120 லித்தியம் அயன் பாலிமர் பேட்டரிகளால் இயங்கும் இந்த விமானம் சென்ற மாதம் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 10 நிமிடங்கள் வரை வானில் பறந்தது.

எனினும், பேட்டரிகளை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் வரை பறக்கக்கூடும் என்று ஏர்பஸ் தெரிவித்துள்ளது.இதே அளவுள்ள பெட்ரோலால் இயங்கும் விமானத்தில் ஒரு மணி நேரம் பறப்பதற்கு 55 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. ஆனால் இஃபேனில் பறக்க வெறும் 16 டாலர்களே செலவாகின்றன. சுற்றுச்சூழலுக்கும் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி