சென்னை:-சென்னை பாரிமுனை உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்தான். மாணவன் சரியாக படிக்காததால், ஆசிரியை உமா மகேஸ்வரி அவனை கண்டித்தார்.
இதனால் ஆசிரியை மீது கடும் கோபத்தில் இருந்த மாணவன் கொலை செய்தான். உடனடியாக மாணவனை கைது செய்து போலீசார் விசாரித்தனர். பின்னர் மாணவன் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவனுக்கு 2 வருட சிறைதண்டனை விதித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி