ஏதென்ஸ்:-ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக 2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின.
அதை பார்த்த கிரீஸ் கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலுடன் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 36 பேரை உயிருடன் மீட்டனர்.அவர்களில் 32 பேர் ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். மீட்கப்பட்டவர்களில் 23 பேர் சோமாலியாவையும், 9 பேர் சிரியாவையும, 3 பேர் எரித்தியாவையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் 22 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 18 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள்.இவர்களது பிணங்கள் கடலில் மிதக்கின்றன.அவற்றை மீட்கும் பணியில் கிரீஸ் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி