சென்னை:-‘சென்னை 600028’, ‘நாடோடிகள்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்த விஜய் வசந்த், ‘மதில் மேல் பூனை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அதனையடுத்து அவர், ‘என்னமோ நடக்குது’ என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக சாட்டை நாயகி மகிமா நடித்து இருந்தார்.
இவர்கள் தவிர பிரபு, ரகுமான், சரண்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். நடிகர் பிரேம்ஜி அமரன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார். கடந்தவாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய ஹீரோ விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ஆரம்பித்தோம். இன்று அஜித்தின் பிறந்தநாளில் சக்சஸ் மீட் கொண்டாடியுள்ளோம். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி