செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம்!…

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம்!…

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்த ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-ராமகிருஷ்ணன் குங்குமப்பூவும் கொஞ்சிப்புறாவும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.அதையடுத்து, ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனால் அதையடுத்து, ராமகிருஷ்ணனுக்கு ஹீரோ வாய்ப்புகள் வரவில்லை.

அதனால், தனது ஹீரோ இமேஜை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தனக்குத்தானே கதை பண்ணிக்கொண்டு சில தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற படத்தை இயக்கி தானே நாயகனாகவும் நடித்தார்.படத்தை எந்த நிறுவனமும் வாங்கி வெளியிட முன்வராததால்,பட நிறுவனமே 70 லட்சம் ருபாய் வரை செலவு செய்து படத்தை வெளியிட்டது.

ஆனால்,தியேட்டர்களில் ஈ ஆடுவதால் பெருத்த நஷ்டத்தை கொடுத்துள்ளது.அந்த வகையில், படத்தை 1.5 கோடியில் தயாரித்த தயாரிப்பாளருக்கு, படத்தை வெளியிட செலவு செய்த 70 லட்சத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி செலவாகி விட்டதாம். ஆனால் படம் சம்பாதித்து கொடுத்ததோ வெறும் 15 லட்சம்தானாம். அதனால், இனிமேல் சாட்டிலைட் உரிமத்தை கொடுத்து கிடைக்கிறதை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி