சியோல்:-தென்கொரியாவில் ஜின்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.இக்கப்பலில் 325க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜின்டோ தீவுக்கு இன்ப சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதில் 200 படகுகளும், 35 விமானங்களும், 13 மீன்பிடி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டன.641 பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இது வரை 150 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன் சுமார் 150 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி