காசியாபாத்:-உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியை சேர்ந்தவர், ஓம் பிரகாஷ் திவாரி(35).கடந்த சில ஆண்டுகளாக பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நிம்மதியின்றி தவித்த இவர், நேற்றிரவு மசூரி பகுதியில் ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ஓம் பிரகாஷ் திவாரியின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவர், குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
‘அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே,நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆகப் போகிறீர்கள். பொருளாதாரப் பிரச்சனையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.’ என்று அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி