அதன் பிறகு சமந்தாவை வைத்து ‘நான் ஈ’ படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க பாகுபலி என்ற சரித்திர படத்தை இயக்கி வருகிறார். பெரிய அரண்மனை செட்கள் அமைத்து இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தமிழிலும் மகாபலி என்ற பெயரில் இந்த படம் வருகிறது.ராஜமவுலி கூறியதாவது:–
ரஜினி என்னிடம் ராஜா காலத்து சரித்திர படங்களை பிரமாண்டமாகவும், ஜனரஞ்சகமாகவும் எடுக்கிறீர்கள் என்று பாராட்டினார். உங்கள் படப்பிடிப்பு அரங்கை காண எனக்கு ஆர்வமாக இருக்கிறது. எனவே படப்பிடிப்பு நடக்கும் போது என்னை கூப்பிடுங்கள் என்றார்.ரஜினி இப்படி சொன்னதை என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.இவ்வாறு ராஜமவுலி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி