செய்திகள்,திரையுலகம் நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை!…

நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை!…

நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை பறிக்க தடை!… post thumbnail image
ஐதராபாத்:-தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில் மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கும் ‘தேனி கய்ன ரெடி’ என்ற தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் போஸ்டர்கள், அழைப்பிதழ்கள், விளம்பரங்களில் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோரது பெயர்களில் ‘பத்மஸ்ரீ’ என்ற வாசகம் பெரிய அளவில் இடம் பெற்றது.

இதையடுத்து ஆந்திர மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் இந்திர சேனா ரெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மத்திய அரசு வழங்கிய கவுரவ விருதை இருவரும் சொந்த ஆதாயத்துக்காகவும், தங்களின் சினிமா வாழ்க்கையை மேம்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். எனவே விருதை திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த ஆந்திர ஐகோர்ட்டு, நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் ஆகியோர் பத்மஸ்ரீ விருதை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதால் விருதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. மனு விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நடிகர்கள் மோகன் பாபு, பிரம்மானந்தம் ஆகியோரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற தடை விதித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி