செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…

ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்…

ஐ.பி.எல்: இன்று மும்பையுடன் பெங்களூர் மோதல்… post thumbnail image
துபாய்:-7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 3–வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேப்டன் கோலி, யுவராஜ்சிங், கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், அல்பி மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் இருப்பதால் பெங்களூர் அணி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அந்த அணிக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான பேட்டிங்கால் தோற்ற மும்பை அணி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.போல்லார்ட், மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித்சர்மா, மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் மும்பை அணியில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி