சென்னை:-நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது.இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர்.
ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் மட்டும் தனது கதைக்கு ஒரு மெச்சூரிட்டியான கேரக்டர்தான் வேண்டும் என்பதால் சினேகாவை நடிக்க வைத்தார்.அதைத் தொடர்ந்து விடியல் என்ற படத்தில் மட்டும் நடிக்கும் சினேகா, இப்போது பாடலாசிரியர் சினேகன் நடித்து வரும் ‘ராஜராஜசோழனின் போர்வாள்‘ என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், 1100 வருடங்களுக்கு முந்தைய காலத்து கதையில் உருவாகும் இப்படத்தில் அந்த காலகட்டத்து பெண்மணியாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு சினேகா நடிப்பது போன்று, ஸ்ரேயாவும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி