செய்திகள்,திரையுலகம் கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…

கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…

கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு ஊரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துக் கொள்கிறார். அதன்பின் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒருவர், மனைவியின் தவறான போக்கால் அவளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவர்கள் அனைவரும் இறந்தபின் சொர்கம், நரகம் என்று செல்வதற்கு முன் ஒரு இடத்தில் வைக்கப்படுகிறார்கள். அங்கு நாயகன் மதுவும் அங்கு இருக்கிறார்.

அந்த இடத்தில் வருபவர்கள் அனைவருக்கும் ஒரு கதை உள்ளது, அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டவர்கள். இந்த இடத்தில் மது எப்படி வந்தான்? அவன் எதற்காக தற்கொலை செய்துக் கொண்டான் என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகன் மதுவுக்கு முற்பகுதியில் நடிக்க வாய்ப்பே இல்லை. பிற்பகுதியில் குறைந்தளவு காட்சிகள் என்றாலும் அதை திறம்பட செய்திருக்கிறார். நாயகி அபிநிதி ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஒரு சில படங்களில் நாயகியை பாட்டுக்காகவாது பயன்படுத்துவார்கள், ஆனால் இப்படத்தில் நாயகிக்கு அதற்கு கூட இடமில்லை. காமெடி என்னும் பெயரில் சிங்கம்புலி பேசும் வசனங்களை சகிக்க முடியவில்லை.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை முடிவல்ல, தற்கொலை செய்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் எழுகிறது என்ற வலுவான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் பட்டுராம் செந்தில், அதை வலுவில்லாத திரைக்கதையை வைத்து எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள், தேவையற்ற காட்சிகள், நீண்ட காட்சிகள் என படத்தில் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் திணித்திருக்கிறார். நாயகன் மது தற்கொலை செய்யும் காட்சியை கூடுதல் கவனத்தோடு எடுத்திருக்கலாம்.இந்திரவர்மன் இசையில் ஒரு பாடலை மட்டுமே ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஓரிரு காட்சிகளில் கே.வி.கணேசின் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘கற்பவை கற்றபின்’ தீர்வு…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி