தாயை பிரிந்த குட்டி யானை, தனது தாய் யானையின் அருகிலேயே கண்ணீருடன் நின்று கொண்டு இருக்கிறது.பயங்கர பிளிறலுடன் இறந்த யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உலாவிக் கொண்டு இருந்த சுமார் 5க்கும் மேற்பட்ட யானைகள் அந்த பகுதிக்கு வந்தன.இந்த யானைகளும் அங்கேயே நின்று கொண்டு உள்ளன.இது பற்றி தகவல் கிடைத்ததும் வனவர் ராமலிங்கம் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.ஆனால் இவர்களை இறந்து கிடக்கும் யானைக்கு அருகில் நெருங்க விடாமல் மற்ற யானைகள் விரட்டியடிக்கிறது.
இந்த யானைகளை பட்டாசு வெடித்து அங்கிருந்து விரட்டி விட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.தாய் யானையை பிரிந்து செல்ல மறுத்து அந்த இடத்திலேயே சுற்றி வரும் குட்டி யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைப்பது எப்படி. என வன அலுவலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி