அரசியல்,செய்திகள் மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் தீ விபத்து!… காயமின்றி உயிர் தப்பினார்…

மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் தீ விபத்து!… காயமின்றி உயிர் தப்பினார்…

மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஓட்டல் அறையில் தீ விபத்து!… காயமின்றி உயிர் தப்பினார்… post thumbnail image
மால்டா:-மேற்கு வங்கத்தில் வரும் 24ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கட்சி வேட்பாளரும், எம்பியுமான நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அவர் நேற்று மால்டா மாவட்டத்துக்கு சென்றிருந்தார். மாலை 6.40 மணி அளவில், மம்தா தங்கியிருந்த ஓட்டல் அறையின் ஏசி திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பாத்ரூமில் இருந்த மம்தாவால் உடனடியாக வெளியே வரவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்ட கட்சி நிர்வாகி ஜாய்தீப் உடனடியாக அறைக்குள் சென்று, அவசர அவசரமாக மம்தாவை போர்வையால் மூடி வெளியில் கொண்டு வந்தார். இதனால் மம்தா காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். டாக்டர்கள் குழுவினர் மம்தாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து சதிச் செயலாக இருக்கும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தா தங்கியிருந்த ஓட்டல் அறையில் பயங்கர தீவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி