செய்திகள்,திரையுலகம் நடிகர் சந்தானத்துக்கு ரூ.60,000 அபராதம்!…

நடிகர் சந்தானத்துக்கு ரூ.60,000 அபராதம்!…

நடிகர் சந்தானத்துக்கு ரூ.60,000 அபராதம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம்.இவரது அலுவலகம் விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ளது.இந்த அலுவலகத்துக்கு முறையாக மின் இணைப்பை பெறாமல் வீடு என கூறி அதற்கான மின் இணைப்பை பெற்று கட்டணத்தையும் குறைந்த அளவில் செலுத்தியுள்ளார்.

இதை அறிந்த மின்துறை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சந்தானத்தின் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் அவர் அலுவலகத்தை வீடு என கூறி மின் இணைப்பை பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் அந்த அலுவலகத்தின் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் மின்சார வாரியத்தில் ரூ.60 ஆயிரத்தை அபராதமாக செலுத்தி மீண்டும் மின் இணைப்பை பெற்றுக் கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி