ஜிண்டோ:-தென் கொரியாவில் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளுடன் சென்ற ஒரு சொகுசு படகு புதன்கிழமை கடலில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. இதையறிந்த கேப்டன், படகில் இருந்தவர்களை கடலில் குதித்து உயிர் தப்பும்படி வலியுறுத்தினார். பயணிகளும் உடனே கடலில் குதித்தனர். அதேசமயம் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்த மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு 179 பேரை உயிருடன் மீட்டனர். இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 268 பேரைக் காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் பணி இன்றும் நீடிக்கிறது.
மூழ்கிய படகை ஆய்வு செய்ய ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்பட்டது. கடல் சீற்றம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக நீர்மூழ்கி வீரர்களால் படகின் உள்ளே செல்ல முடியவில்லை.இதனால் காணாமல் போன அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி