சென்னை விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் நரேந்திரமோடி, விமான நிலைய ஓய்வறையில் சிறிது நேரம் தங்க உள்ளார். அப்போது அவர் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசார பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள தனது நீண்டநாள் நண்பர்களையும் அவர் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். அதன்படி மோடியின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகர் ரஜினியும் சந்தித்து பேச உள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினியின் ஆதரவை பெற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் ரஜினியிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினி தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினி மோடியை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஜினி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதை உணர்த்துவதாகவே இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி