அரசியல்,செய்திகள் மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…

மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!…

மும்பையில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கலக்கும் வேட்பாளர்!… post thumbnail image
மும்பை:-தெற்கு மும்பையில் வசிப்பவர் கவுரவ்சர்மா. கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் தேர்ந்தவரான இவர் அந்தப் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.நடிகர்– நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும், இருந்து பயிற்சி அளித்து வருகிறார். 31 வயதாகும் இவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 90 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தவர். சாதனைகளின் போது அவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கலந்து கொள்வார். இதனால் இவர் இந்தியன் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்திப்படங்களில் கதாநாயகர்களுக்காக டூப் போட்டு சுவர்களில் எறி அவர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்து இருக்கிறார்.இதனால் தெற்கு மும்பையில் கவிரவ் சர்மா பிரபலமானார். இந்த நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.‘ஸ்பைடர்மேன்’ பாணியில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். ஸ்பைடர்மேன் போல் சிகப்பு கலர் டி–சர்ட், தொப்பி, புளுகலர் ஜீன்ஸ் அணிந்து மோட்டார் சைக்கிளில் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். ஆங்காங்கே மக்களை கூட்டமாக பார்த்ததும் பைக்கை நிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார். பைக்கில் சுற்றுவதால் தெற்கு மும்பை முழுவதும் பிரபலமாகி விட்டார்.
சிகப்பு உடையைப் பார்த்ததுமே அதோ ஸ்பைடர்மேன் வந்து விட்டார் என்று இளைஞர்கள் குரல் எழுப்பி வரவேற்கிறார்கள்.

தனது தொகுதிக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஸ்பைடர் மேன் உடையில் செல்கிறார். வாசல் வழியாக சென்று ஓட்டு கேட்காமல் காவலாளியிடம் அனுமதி பெற்று வீட்டின் சுவர்களில் சரசரவென்று தொற்றி ஏறுகிறார்.ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே இருப்பவரகளிடம் பேசி ஓட்டு கேட்கிறார். ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டதால் ஜன்னல் வழியாகவே ஓட்டு கேட்கிறார். அவரைப் பார்த்து சிறுவர்– சிறுமிகளும் பெரியோர்களும் ஆச்சரியப்படுகிறார்கள்.ஸ்பைடர்மேனின் பிரசாரம் மும்பையை கலக்குவதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் நம்மால் இதுபோல் வாக்காளர்களை கவர முடியவில்லையே என்று ஏக்கத்துடன் பார்ககிறார்கள்.இதுபற்றி வேட்பாளர் கவுரவ்சர்மா கூறியதாவது:–

எனக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டதால் வாசல் பக்கம் செல்லாமல் ஜன்னல் வழியாக ஓட்டு கேட்டு வருகிறேன். இதனால் வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இப்போது ஓட்டு கேட்டு வருகிறேன். அடுத்து உங்கள் பிரச்சினையை தீர்க்க வீடு வீடாக வருவேன் என்று சொல்லி ஓட்டு கேட்கிறேன்.இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தற்போது மக்கள் மாற்றத்தை விரும்பு கிறார்கள்.டி.வி. தொடர்களில் நான் ஜன்னல் வழியாக வந்து ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை பார்த்து இருப்பார்கள். இப்போது மக்கள் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்த்து வைக்கவும் மக்களை காப்பாற்றவும் நேரில் வந்து இருக்கிறேன்.எனது தொகுதியில் ஏராளமான குடிசைப் பகுதி உள்ளது. இங்கு கழிப்பிட வசதி இல்லை. இந்தப் பகுதிக்கு நவீன கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க பாடுபடுவேன்.இவ்வாறு கவுரவ் சர்மா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி