செய்திகள்,திரையுலகம் மருத்துவமனையில் இளம் கவர்ச்சி நடிகை!…

மருத்துவமனையில் இளம் கவர்ச்சி நடிகை!…

மருத்துவமனையில் இளம் கவர்ச்சி நடிகை!… post thumbnail image
சென்னை:-சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை மோனால் கஜ்ஜார் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் சாப்பிட்ட உணவு புட் பாய்சனாக மாறியதால் திடீரென வாந்தி எடுத்தார்.

அதனால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததால் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததாகவும், தற்போது மோனால் கஜ்ஜார் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் கோலிவுட் அதிர்ச்சி அடைந்தது.தற்போது மோனால் கஜ்ஜார் எந்த படத்திலும் நடிக்கவில்லை எனினும் அடுத்து விமல் நடிக்க இருக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி