செய்திகள்,திரையுலகம் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?… ரஜினியின் பரபரப்பான பேட்டி… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மே 16ஆம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.

கோச்சடையான் படம் குறித்த தகவல்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு, தனது குடும்ப வாழ்க்கை, திரையுலக அனுபவங்கள் போன்ற பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்தை நடிகர் விவேக் பேட்டி எடுத்துள்ளார்.

இந்த பேட்டி ஜெயா டிவிக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்டது. ஜெயா டிவி இந்த பேட்டியை வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்ப இருக்கின்றது. அவரது பேட்டியை காண ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி