செய்திகள்,தொழில்நுட்பம் விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…

விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…

விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த இரண்டு வளையம் காணப்படுகிறது. இந்த இரண்டு வளையங்களுக்கிடையே 14 கி்.மீ இடைவெளி உள்ளது. 7 கி.மீ அகலமும், சில நூறு மீட்டர்கள் அடர்த்தியும் கொண்டுள்ளது.நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதனை சாரிக்லோ என்று அழைக்கின்றனர். சாரிக்லோ என்பது எறி நட்சத்திரங்கள் மற்றும் அளவில் சிறிய கிரகங்கள் நிறைந்த 250 கி.மீ விட்டம் கொண்ட மண்டலம் ஆகும்.

நட்சத்திரத்தின் முன் ஒரு பொருள் கடந்து செல்லும் போது அதன் அதிக வெளிச்சத்தில் ஒரு புள்ளியாக இந்த குட்டிக்கிரகம் தென்பட்டதாகவும், அதை பின்தொடர்ந்த ஆராய்ச்சியில் வளையத்துடன் கூடிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கோபன்கேஹன் பல்கலைக்கழக வானியல் நிபுணர்கள் தெரிவி்த்தனர்.நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனிஷ் தொலைநோக்கியில், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களையும் காணக் கூடிய வகையில் உயர் ரிசல்யூசன் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த குட்டி கிரகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக வானியல் நிபுணர்கள் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி