செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!… post thumbnail image
சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

42 வயதாகும் நடிகை மதுபாலா தீவிர விஜய் ரசிகராம். தான் பிசியாக இருந்த 90களிலேயே விஜய்யுடன் நடிக்க பெரும் முயற்சி செய்ததாகவும், ஆனால் முடியவில்லை என்றும், தற்போது வாய்ப்பு கிடைத்தால் விஜய்யுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.தல்கார் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் நடிக்கும் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் நடிகை மதுபாலா. ஒரு எழுத்தாளராக நடிக்கும் மதுபாலா, காதல் ஜோடிகளை பிரிக்க சதி செய்யும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தில் நடிக்க மதுபாலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த படத்தில் மதுபாலா, 16 வயது இளம்பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி