நியூடெல்லி:-பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம்.
ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடி அருகில் உட்கார்ந்து சாப்பிடலாம்.இந்த திட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி