செய்திகள்,திரையுலகம் ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!… post thumbnail image
சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார்.

மதுபாலா, பாண்டியராஜன், வினுசக்ரவர்த்தி ஆகியோருடன் படத்தின் டைரக்டர் பாலாஜி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு மூணாறில் 55 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படம் மலையாளத்திலும் தயாராகி இருக்கிறது. மலையாள படத்துக்கு, ‘சம்சாரம் ஆரோக்யதினு ஹானிகரம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி