செய்திகள்,திரையுலகம் பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய சிவகார்த்திகேயன்!…

பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய சிவகார்த்திகேயன்!…

பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-ஹன்சிகா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் மான்கராத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.படம் வெளிவரும் முன்னே படத்தின் முன்னோட்டக்காட்சிகள் வெளிவந்து படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது.

தற்போது ராயபுரம் பீட்டர் என்ற பாடல் படம்பிடிக்கப்பட்டு வருகின்றது. இது சிவகார்த்திகேயனின் இன்ட்ரோ சாங், இதில் சிவா வோடு ஜோடி சேர்ந்து ஆடியுள்ளார் பரவை முனியம்மா.சிவகார்த்திகேயன், பரவை முனியம்மா பாட இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் கொலவெறி நாயகன் அனிரூத்.

இதுவரை வந்த திரைப்படங்களில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் இன்ட்ரோ சாங் கொடுத்துள்ளதால் செம்ம குஷியாக உள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி