அப்போது, நாட்டில் பெருகி வரும் ஊழலை சுட்டிக்காட்டி பேசிய அவர், குஜராத்தில் ஊழலை எதிர்த்து போராடி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவற்றை அம்பலப்படுத்த முயன்ற பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார். உதாரணத்துக்கு 4 பெயர்களை குறிப்பிட்ட கெஜ்ரிவால், பொது நோக்கத்துக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த இவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அந்த நால்வரின் ஆன்மாக்களும் சாந்தியடைய வேண்டிக் கொள்வதாக கூறினார்.
ஆனால், அந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்ட 4 பெயர் கொண்ட பட்டியலில் ஒருவர் மட்டும் கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட் வாசலில் கொல்லப்பட்டார். மீதி 3 பேரும் தாக்குதல்களுக்கு பிறகு சிகிச்சை பெற்று உயிருடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.உயிருடன் இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கெஜ்ரிவாலின் அரைவேக்காட்டு அரசியலை குஜராத் மாநில பா.ஜ.க.வினர் கேலி செய்து பேசி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி