செய்திகள்,திரையுலகம் கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…

கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…

கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!… post thumbnail image
சீர்காழி:-நாகை மாவட்டம் கீழ்வேளூர் பட்டமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மர வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (35), மகள் மதுமிதா(7), மாமியார் வளர்மதி ஆகியோர் சீர்காழிக்கு நேற்று காலை ஆட்டோவில் சென்றனர்.

பாதரகுடி சென்றபோது, ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதியது. இதில், மதுமிதா பரிதாபமாக இறந்தாள். ஆட்டோ டிரைவர் சண்முகம், வளர்மதி, மல்லிகா ஆகியோர் காயம் அடைந்தனர்.காரை ஓட்டி வந்தது டிவி சீரியல்களில் நடித்து வரும் ஷியாம் என்பதும், இவர் மயிலாடுதுறையில் இருக்கும் நண்பரின் தாய் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் ஷியாமை போலீசார் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி