செய்திகள் கடவுளை வணங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது!…பாதிரியாரின் பேச்சுக்கு கடும் கண்டனம்…

கடவுளை வணங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது!…பாதிரியாரின் பேச்சுக்கு கடும் கண்டனம்…

கடவுளை வணங்கும்போது உள்ளாடை அணியக்கூடாது!…பாதிரியாரின் பேச்சுக்கு கடும் கண்டனம்… post thumbnail image
கென்யா:-கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் அருகே உள்ள தண்டோரா ப்ஹஸ் 2 என்ற பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியராக பணிபுரியும் ரேவ்.நஜோஹி என்பவர், தனது பக்தர்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய போது “கடவுளை வணங்கும்போது உடலையும், மனதையும் மிகவும் ரிலாக்சாக வைத்திருக்க வேண்டும்.

மனதில் எவ்வித நினைவும் இன்றி கடவுளை வணங்குவது போல உடலிலும், உள்ளாடைகள் எதுவும் இன்றி கடவுளை வணங்கினால்தான் கடவுளை நேரில் காண முடியும். இந்த விதி பெண்களுக்கும் பொருந்தும் என்று கூறினார்.சர்ச்சுக்கு வருவதற்கு முன்னர் பெற்றோர்கள் தாங்களும், தங்கள் குழந்தைகளும் உள்ளாடைகளை அகற்றிவிட்டு சாதாரண உடைகளை மட்டும் அணிந்து வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவருடைய கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கடவுளை சந்திக்க டிரஸ் கோட் எதுவும் தேவையில்லை என்றும், பாதிரியார் ரேவ்.நஜோஹி பக்தர்களை தவறான பாதைக்கு திசை திருப்புகிறார் என்றும் அவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சனையால் நைரோபியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி