February 25, 2014

செய்திகள், திரையுலகம்

ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!…

ஐதராபாத்:-தெலுங்கில் நடித்து வரும் சரித்திர படங்களுக்காக, மாதக்கணக்கில் வாள் சண்டை பயிற்சி எடுத்த அனுஷ்கா, குதிரையேற்ற பயிற்சியும் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது, ஹன்சிகாவும், தான், நடிக்கும் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார். குதிரையேற்றத்தில் போதிய பயிற்சி இல்லாத ஹன்சிகா, முதலில் குதிரை அருகே சென்றபோது, பயத்தில் தெறித்து ஓடினாராம். அடிக்கடி, அந்த குதிரை காலால் எட்டி உதைத்ததால், ‘இந்த காட்சியை மாற்றி விடுங்களேன்’ என, இயக்குனரிடம் கெஞ்சினாராம். ஒரு வழியாக, ஹன்சிகாவை சமாளித்து, குதிரையில் அமர வைத்து படமாக்கியுள்ளனர். மனசு முழுக்க பயத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் அளவில்லா சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி, ஒரு நாள் முழுக்க அந்த காட்சியில் நடித்துள்ளார் ஹன்சிகா.

செய்திகள்

நிலவைத் தாக்கிய சிறிய கோள்!…

பாரிஸ்:-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவர் சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தோலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது, வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிமிடங்கள் வரை நீடித்த நீண்ட நிகழ்வாக இது இருந்தது எனவும் அவர் கூறினார். அந்த கணத்தில் தான் ஒரு அரிதான மற்றும் அசாதாரண காட்சியை கண்டதை உணர்ந்ததாக மக்களிடையே அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட அந்த கோள் போன்ற பாறையின் எடை 400 கிலோவாகவும், 2 அடி சுற்றளவும், 1.40 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Scroll to Top