செய்திகள் நிலவைத் தாக்கிய சிறிய கோள்!…

நிலவைத் தாக்கிய சிறிய கோள்!…

நிலவைத் தாக்கிய சிறிய கோள்!… post thumbnail image
பாரிஸ்:-ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவர் சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தோலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது, வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிமிடங்கள் வரை நீடித்த நீண்ட நிகழ்வாக இது இருந்தது எனவும் அவர் கூறினார்.

அந்த கணத்தில் தான் ஒரு அரிதான மற்றும் அசாதாரண காட்சியை கண்டதை உணர்ந்ததாக மக்களிடையே அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட அந்த கோள் போன்ற பாறையின் எடை 400 கிலோவாகவும், 2 அடி சுற்றளவும், 1.40 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி