செய்திகள்,விளையாட்டு சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்…

சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்…

சோச்சி ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நிறைவடைந்தன… பதக்கப்பட்டியலில் ரஷ்யா முதலிடம்… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7-ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. சுமார் 50 பில்லியன் யூரோக்கள் செலவில் வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றது. 2900 வீரர்-வீராங்கனைகள் இந்த குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.

இந்த போட்டிகளை நடத்திய ரஷ்யா அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. 13 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை ரஷ்ய வீரர்-வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அமெரிக்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க முடியாமல் நார்வே மற்றும் கனடாவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை நார்வே தக்கவைத்து கொண்டது.
0 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 25 பதக்கங்களை பெற்ற கனடா மூன்றாவது இடத்தை பெற, அதற்கு அடுத்த நான்காவது இடத்தை 9 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பிடித்துள்ளது.

இதற்கு அடுத்த நிலைகளில் 8 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்ற நெதர்லாந்தும், 8 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்ற ஜெர்மனியும், 6 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றிய ஸ்விட்சர்லாந்தும் உள்ளன.நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட வண்ணமயமான வாணவேடிக்கைகளும், கண்கவரும் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி