February 25, 2014

செய்திகள், விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை…

வங்காளதேசம்:-இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:– தேதி மோதும் அணிகள் இடம் நேரம் பிப்.25: பாகிஸ்தான்–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.26: இந்தியா–வங்காளதேசம் பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.27: பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.28: இந்தியா–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி மார்ச்.1: வங்காளதேசம்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி மார்ச்.2: இந்தியா–பாகிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.3: இலங்கை–ஆப்கானிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.4: பாகிஸ்தான்–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.5: இந்தியா–ஆப்கானிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.6: இலங்கை–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.8: இறுதிப்போட்டி மிர்புர் பகல் 1.30 மணி

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

நடிகை ‘குஷ்பு’ தென் சென்னையில் போட்டியா?…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், இன்று 5–வது நாளாக நடைபெறுகிறது. இது வரை நேர்காணல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகின்றன. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தவிர இளைஞர் அணியிருக்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரபலமானவர்களும் தி.மு.க. வேட்பாளர்களாக களம் இறக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. 2004–ம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியை தி.மு.க. இழந்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை எப்படியாவது இங்கு வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டுள்ளது. தென் சென்னை தொகுதியில் பிரபலமான வேட்பாளரை நிறுத்தினால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவே நடிகை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு சரியான போட்டியாக அமையும். எனவே தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டது. தி.மு.க. மாநாட்டில் குஷ்புவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே அவருக்கு தென் சென்னை தொகுதி உறுதி என்று தி.மு.க.வினரே பேசிக் கொண்டனர்.தென் சென்னை தொகுதியில் முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் இல.கணேசன் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.காங்கிரஸ் சார்பிலும் முக்கிய தலைவர் ஒருவர் இந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. சார்பில் குஷ்பு போட்டியிடுவாரா என்பது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, வேட்பாளர் நேர்காணல் இன்னும் முடியவில்லை. தென் சென்னையில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்த கட்சி மேலிடம் விரும்புகிறது. அது யார் என்பதை தலைவர் அறிவிப்பார் என்றார்.

செய்திகள், திரையுலகம்

விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…

சென்னை :-விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா,லிங்குசாமி இணையும் ‘அஞ்சான்’ படத்திலும் சமந்தா நடிக்கிறார். இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அதில், விஜயுடன் நடிப்பதால் என் கனவு நனவாகிவிட்டது என தெரிவித்தார். இப்படத்தில் விஜய் மிக அழகாக இருக்கிறார், விஜயுடன் டான்ஸ் பண்ணுவதற்குதான் பயமாக இருக்கிறது. தொடர்ந்து அஞ்சான் படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு பிடிக்கும். ‘என தெரிவித்தார். விஜய், சூர்யா இருவரில் யாரை பிடித்திருக்கிறது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ‘ இருவரையுமே எனக்கு பிடித்திருக்கிறது. ‘ என தெரிவித்தார் சமந்தா.

செய்திகள், திரையுலகம்

தனுஷ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடி!…

சென்னை :-மீண்டும் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவுடன் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.பொன் ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடி பெரிதாகப் பேசப்பட்டது. படமும் ஹிட்டானது. அதற்குப் பிறகு ஸ்ரீதிவ்யா பல படங்களில் நடிக்கக் கமிட் ஆனார். தற்போது ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு, விதார்த், ஜெய்யுடன் நடிக்கிறார்.சிவகார்த்திகேயன் ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார். எதிர்நீச்சல் துரை.செந்தில்குமார் இரண்டாவது படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்தே இயக்குகிறார். ‘டாணா‘ என டைட்டில் வைத்திருக்கும் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.இதில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!…

சென்னை :-அஜித் , விஜய் , விக்ரம் , சூர்யா ஆகிய நான்கு டாப் ஸ்டார்களுக்கும் இசையமைத்து இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, சிங்கம் 2′, ‘வீரம்’ என அவர் இசையமைத்த படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.ஆனால், அஜித்துக்கு டியூன் போட ரொம்பக் கஷ்டப்பட்டதாகக் கூறுகிறார் தேவிஸ்ரீ பிரசாத். அஜித், விஜய், விக்ரம், சூர்யா நாலு பேருமே மாஸ் ஹீரோக்கள். எல்லோருக்கும் கஷ்டப்பட்டுதான் BGM போட்டேன் . ஆனா அதிகம் கஷ்டப்பட்டு பயந்து போட்டது அஜித் சாருக்குதான். ஏன்னா நடையால ,ஒரே ஒரு பார்வையால ஏதாவது ஒரே வார்த்தையில தியேட்டர அதிரவைக்கிற அந்த FIRE ரஜினி சார்க்கு அப்பறம் அஜித் சாருக்குதான் இருக்கு.அஜித் சாருக்கு BGM சாதரணமா போட முடியாது. நம்மால எவ்வளவு மாஸா போட முடியுமோ அதைப் போட்டாதான் அஜித் ரசிகர்கள் அத கொஞ்சமாவது ஏத்துப்பாங்க. அதனால சார் வர்ற ஒவ்வொரு சீனுக்கும் பயந்துகிட்டே இது நல்லா வருமானு கஷ்டப்பட்டு போட்டேன். அதுவும் அந்த ரயில் சண்டைக்கு , சார் உயிரப் பணையம் வச்சு ஈசியா பண்ணாரு. யாருமே எடுக்காத ரிஸ்க் எடுத்திருக்கார் BGM சொதப்பிட்டா வெளியில தலைகாட்டமுடியாதேனு பயந்தே போட்டேன். நான் பிண்ணனி இசைக்கு அதிக நாள் எடுத்துக்கிட்டது ‘வீரம்’ படத்துக்குதான் . அஜித் சாரோட சமீபத்திய படங்கள் எல்லாமே BGM பட்டையக் கிளப்பியிருக்கும். ‘வீரம்’ ரிலீஸ் முதல் நாள் இரவுகூட வீட்டுல ‘மங்காத்தா’ போட்டுப் பார்த்தேன் . அதுல பிண்ணனி இசை மிரட்டியிருக்கும் . இதையெல்லாம் பார்த்த தல ரசிகர்கள் நம்ம இசையை ஏத்துப்பாங்களான்னு பயம் வந்துடுச்சு.ஆனா, ‘வீரம்’ படத்தை தியேட்டர்ல பாக்குறப்ப அஜித்சார் வர்ற சீன்ஸ்லாம் விசில் பறக்குறப்பதான் நம்ம இசையும் நல்லா வந்துடுச்சுனு சந்தோஷப்பட்டேன் . அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசையா இருக்கு.” என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

செய்திகள், திரையுலகம்

ஹீரோயின்களிடம் நெருங்கி பழகும் நடிகர் கவுதம் கார்த்திக்!…

சென்னை:-ஆர்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை வீட்டுக்கு அழைத்து பிரியாணி கொடுத்து அசத்துவதில் கில்லாடி. நயன்தாரா, அனுஷ்கா என்று பல ஹீரோயின்களுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அவருக்கு போட்டியாக வந்திருக்கிறார் கவுதம் கார்த்திக். அந்த காலத்தில் ஹீரோயின்களிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் உடனே கார்த்திக் பேரை சொல்வார்கள். தற்போது அந்த இடத்தை பிடிக்கும் சுட்டியாக இருக்கிறார் அவரது மகன் கவுதம் கார்த்திக். தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களிடம் சிரித்து பேசி வசியம் செய்வதில் கில்லாடியாகி விட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்த கவுதமை தன் அருகில் வந்து அமரச் சொல்லி நீண்ட நேரம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார் லட்சுமி மேனன்.தற்போது ஐஸ்வர்யா இயக்கும் வை ராஜா வை என்ற படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குருஸ் என்ற ஆடம்பர கப்பலில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் உள்ளன. ஷூட்டிங் முடிந்ததும் கவுதமும், பிரியாவும் அங்கு சென்று விளையாடி மகிழ்கின்றனர். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, ஷூட்டிங் முடிந்த கையோடு நானும் கவுதமும் கப்பலில் சுற்றித்திரிவதுதான் வேலை. தியேட்டர், ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டு என்று பல பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சென்றோம். குங்பூ பாண்டாவின் ஆளுயர பொம்மை அங்கு இருக்கிறது. அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கடினமான ஒரு கேமை எனக்காக விளையாடி கவுதம் நிறைய ஸ்கோர் செய்து காட்டி எனக்கு பரிசுகளை பெற்றுத்தந்தார் என்றார்.

செய்திகள், திரையுலகம்

சினி பீல்டில் எனக்கு நண்பர்கள் இல்லை என கூறும் நடிகை!…

சென்னை:-ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார். ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது. எனது நிறைய நண்பர்கள் சினிமா துறையை விட்டு வெளியில்தான் இருக்கிறார்கள். சினிமாவில் எனக்கு அதுபோல் நண்பர்கள் வட்டம் கிடையாது. நானும் பெரிதாக யாரிடமும் பழகுவது இல்லை.நடிப்பு முடிந்ததும் எனது சொந்த வேலையை பார்க்கவே ஆர்வம் காட்டுவேன். இன்ஜினியரிங் படிப்பு முடித்தபிறகு நடிக்க வந்தேன். தற்போது மீண்டும் படிப்பு மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். எனது மேற்படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த உள்ளேன். நான் எதையும் வெளிப்படையாக பேசுபவள். மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். மனதுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு உதட்டளவில் வேறுமாதிரி பேசுபவர்களை பிடிக்காது. அவர்களை சந்திப்பதைகூட தவிர்த்து விடுவேன்.இவ்வாறு கூறினார்.

செய்திகள், திரையுலகம்

நடிக்க வாய்ப்பு இல்லாததால் பாட்டு பாட வாய்ப்பு தேடும் கவர்ச்சி நடிகை!…

சென்னை:-யாரடி நீ மோகினி, கற்றது களவு, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருப்பவர் முமைத்கான். கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாப் பாடகி ஷகிரா. அவரைப்போல் நானும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபத்தில் அழகிபோட்டி ஒன்றில் மேடையில் தோன்றி சொந்த குரலில் பாப் பாடல் பாடினேன். அதில் எனது டான்ஸ் மூவ்மென்ட்டையும் போட்டேன். அது பாராட்டை தந்தது. சினிமாவில் மட்டும் பார்த்து வந்த ரசிகர்கள் மேடையில் நான் பாடி ஆடியதை கண்டதும் பரவசம் அடைந்து வரவேற்றனர். உடனே இன்னொரு பாடலை பாட வேண்டும் என்றனர். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும். கொலம்பியா நாட்டை சேர்ந்த பாப் பாடகி ஷகிராபோல் மேடையில் ஆடிப்பாட வேண்டும் என்பதுதான் ஆசை. பாப் பாடல் பாடியதற்காக கிடைத்த அப்ளாஸ் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு நாள் என் ஆசை நிறைவேறும். எனது ஆசையை எனது நண்பரிடம் தெரிவித்தேன். முதலில் அவர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு நானே சொந்த குரலில் பாடி காட்டியபோது எனது ஆர்வம் புரிந்தது. பிறகு பாடுவதற்கான டிப்ஸ் கொடுத்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட குத்து பாடல்களுக்கு சினிமாவில் நடனம் ஆடி இருக்கிறேன். இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எண்ணுகிறேன் என்றார். முமைத்கானுக்கு நடிப்பு சான்ஸ் குறைந்துவிட்டது. இதனால்தான் அவர் பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்டுவதாகவும் சில இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

வில்லன் நடிகர் மீது கோபத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

கொல்கத்தா:-துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து புதிய படம் உருவாக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்தது. அப்போது படமாக்கப்பட்ட சேசிங் காட்சியில் வங்காள வில்லன் நடிகர் தோடா ராய் சவுத்ரி நடித்தார். ஷூட்டிங் முடிந்து சென்ற அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீடியாவிடம் முருகதாஸ் பட கதையை அவர் லீக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வில்லன் நடிகர் தோடாவின் வேடம் படத்தில் குறைக்கப்பட்டது. அவர் மெயின் வில்லன் கிடையாது என்று முருகதாஸ் கூறினார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தோடா, படத்தின் மெயின் வில்லன் கிடையாது. இன்னும் வேடத்துக்கு தகுதியான வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருக்கிறோம். கொல்கத்தாவில் ஷூட்டிங் நடந்தபோது சேசிங் காட்சிக்காக சிலர் தேவைப்பட்டனர். அப்படி தேர்வானவர்தான் தோடா என்றார். சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் கதையை மட்டுமின்றி ஒன்லைனை கூட ரகசியமாக பாதுகாக்கின்றனர். வேறு யாராவது காப்பி அடித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

‘வேங்கை புலி’ படத்தின் கதை!…

சென்னை:-மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் திரைக்கு வருகிறது. அவருக்கு ஜோடியாக தீக்க்ஷா சேத் நடிக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்ரி இசை. எஸ்.ஜிஆர்.பிரசாத், கோவை வேல்முருகன் தயாரிப்பு. பி.வி.எஸ்.ரவி இயக்கி உள்ளார். பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று எண்ணும் கோபிசந்த், தீக்ஷா மீது காதல் கொள்கிறார். அந்த காதலுக்காக சிலரை கொல்கிறார். அவர் எப்படி பிரச்னைகளிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.

Scroll to Top