செய்திகள்,திரையுலகம் தனுஷ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடி!…

தனுஷ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடி!…

தனுஷ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஜோடி!… post thumbnail image
சென்னை :-மீண்டும் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவுடன் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.பொன் ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடி பெரிதாகப் பேசப்பட்டது. படமும் ஹிட்டானது.

அதற்குப் பிறகு ஸ்ரீதிவ்யா பல படங்களில் நடிக்கக் கமிட் ஆனார். தற்போது ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு, விதார்த், ஜெய்யுடன் நடிக்கிறார்.சிவகார்த்திகேயன் ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார்.

எதிர்நீச்சல் துரை.செந்தில்குமார் இரண்டாவது படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்தே இயக்குகிறார். ‘டாணா‘ என டைட்டில் வைத்திருக்கும் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.இதில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி