செய்திகள்,திரையுலகம் ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!…

ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!…

ஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை!… post thumbnail image
ஐதராபாத்:-தெலுங்கில் நடித்து வரும் சரித்திர படங்களுக்காக, மாதக்கணக்கில் வாள் சண்டை பயிற்சி எடுத்த அனுஷ்கா, குதிரையேற்ற பயிற்சியும் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது, ஹன்சிகாவும், தான், நடிக்கும் ஒரு புதிய படத்துக்கான பாடல் காட்சியில், குதிரையில் அமர்ந்து வருவது போன்று நடித்துள்ளார். குதிரையேற்றத்தில் போதிய பயிற்சி இல்லாத ஹன்சிகா, முதலில் குதிரை அருகே சென்றபோது, பயத்தில் தெறித்து ஓடினாராம். அடிக்கடி, அந்த குதிரை காலால் எட்டி உதைத்ததால், ‘இந்த காட்சியை மாற்றி விடுங்களேன்’ என, இயக்குனரிடம் கெஞ்சினாராம்.

ஒரு வழியாக, ஹன்சிகாவை சமாளித்து, குதிரையில் அமர வைத்து படமாக்கியுள்ளனர். மனசு முழுக்க பயத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் அளவில்லா சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி, ஒரு நாள் முழுக்க அந்த காட்சியில் நடித்துள்ளார் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி