கோச்சடையான மிக அதிக எண்ணிக்கையான தியேட்டர்களில் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதால், அந்த படத்தின் வெற்றி மற்றும் வசூலை பொருத்து மே மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரம்தான் விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்க முடியும் என தியேட்டர்கள் உரிமையாளர் சங்கம் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார்ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக தியேட்டர் கிடைப்பதை பொருத்து மேமாதம் 2 ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி விஸ்வரூபம் ரிலீசாகும் என தெரிகிறது.
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனே இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி