சென்னை:-ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.ஜெயம் ரவி படத்தில் நயன்தாரா மரத்தை சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு மட்டும் பாடிவிட்டு செல்ல மாட்டாராம். மாறாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடிக்கிறாராம்.படத்தில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ளனர்.
அந்த காட்சியில் வெறியோடு மோதியவர்கள் வேறு யாரும் இல்லை ஹீரோ ரவியும், ஹீரோயின் நயன்தாராவும் தான்.முன்னதாக ஜெயம் ரவிக்கு ஆதிபகவன் படத்தில் நீத்து சந்திராவுடன் மோதும் காட்சியில் நடித்த அனுபவம் நயன்தாராவுடன் மோதும் காட்சியில் உதவியாக இருந்ததாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி