கராச்சி:-இந்திய பிரிமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஊழல் புகார் காரணமாக இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கு உடையவராக பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் உள்ளார். தன் சுயநலத்திற்காக அனைத்தையும் பயன்படுத்துகிறார். இவரே எல்லா முடிவையும் எடுக்கிறார். சக நிர்வாகிகள் வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்பாக’ மட்டுமே உள்ளனர்.
பிரிமியர் தொடரில் ‘ஸ்பாட்–பிக்சிங்’ நடப்பது மோசமானது. இதை தடுக்க, சீனிவாசன் நடத்தும் சென்னை அணியை தடை செய்வதுதான் ஒரே வழி,’’என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி