செய்திகள்,திரையுலகம் உதயநிதிஸ்டாலின்–நயன்தாரா நடிக்கும் ‘நண்பேண்டா’ படப்பிடிப்பு துவக்கம்…

உதயநிதிஸ்டாலின்–நயன்தாரா நடிக்கும் ‘நண்பேண்டா’ படப்பிடிப்பு துவக்கம்…

உதயநிதிஸ்டாலின்–நயன்தாரா நடிக்கும் ‘நண்பேண்டா’ படப்பிடிப்பு துவக்கம்… post thumbnail image
கும்பகோணம்:-கும்பகோணம் காந்தி பூங்காவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘நண்பேண்டா‘ என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நேற்று உதயநிதி ஸ்டாலின்–நயன்தாரா தொடர்பான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்குகிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வருகிற 24–ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் காந்தி பூங்கா பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. வெளிப்புற படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை மேனேஜர் சுவீட் ரவி செய்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி