பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் போன அதிகபட்ச விலை இதுவாகும்.
இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் கவுதம் கம்பீர் 11.04 கோடிக்கு (கொல்கத்தா அணிக்கு) ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்து வந்தது.அதுமட்டுமின்றி இந்த ஐ.பி.எல். போட்டியில் அணிகளால் தக்கவைக்கப்படும் கேப்டன்களுக்கு ஊதியமாக ரூ.12.5 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி தக்கவைக்கப்பட்டு இருக்கும் சென்னை அணியின் கேப்டன் டோனி, பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோரின் சம்பளத்தையும் மிஞ்சி யுவராஜ்சிங் சாதனை படைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி